Skip to main content

இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான்.இறங்கி தான் “பத்தினி” என்பதை சொல்கிறாள்.

அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார்… கணவன்.அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள்.

– இது ராமாயணம்

ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.

ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து “நான் இவளோடு கூட வேண்டும் என்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள். தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.

– இது "நளாயினி” கதை.

*இது அனைத்தும் வட மொழி இலக்கியங்கள்*…

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. தன் இடப் பக்க மார்பை திருகி எறிந்து ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,

தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், ‘அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா’ என்று. –

– இது “சிலப்பதிகாரம்”…

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசி விட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை,ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான்.

– இது “மணிமேகலை”…

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான்.

அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.

மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது,’இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்’ என்று யோசிக்கிறாள்.

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள்,“நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?

நான் மடிவது பற்றி எந்த கவலையும் இல்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான்.

என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு” என்று.“அட அதனால் என்ன? தாராளமாக சுற்றி வா” என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள்.

முதல் சுற்று,இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள்.

– இது “குண்டலகேசி”…

*இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்*…

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள்.

அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,அறம் தவறினால் “அடங்காதே”, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் “தமிழ் இலக்கியங்கள்”..

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது.

உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.

*சங்ககாலத்திலேயே, “47 பெண் எழுத்தாளர்களை"க் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.* உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண் -களுக்கு உரிமை கிடையாது.

ஆனால் "கீழடி” போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்…

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்.“

💐🙏🏻

Comments

Popular posts from this blog

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...

Fun Stills: Helmet is Necessary for Thief Also

This is wild! 🤯 My man's scooter was stolen, he filed an FIR, and then he gets a traffic challan with the thief's face in the picture! 🛵 Talk about irony! 😂 This just proves how necessary helmets are, especially if you're up to no good! #ScootyTales

அபிமன்யுவின் மரணத்திற்குப் பின்பு நிகழ்ந்தவை....

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்... அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுக பற்றி கொண்டு... கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ? என்று கேட்டான். அதற்கு கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன்: கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு பற்று, பாசம், பந்தம் , எதுவும் கிடையாது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. கண்ணன்: உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அர்ஜுனன்: அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச, பந்தம் அவர்களை விட்டு போகாது . கண்ணன்: அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன். ஒளிப்பிழம்பு வடிவுடன் சொகலோகத்தில் இருந்தான் அப...