Skip to main content

*எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம்* ஒருமுறையாவது , கோவில் சுவர்களில் *சிகப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் ?*

என்று யோசித்து பார்த்திருக்கிறோமா . ?

இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்…

*“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே!’’*

என்பது நம் முன்னோர் வாக்கு.!

ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது….✨

*வாருங்கள் கோவிலைப் பற்றி பல தகவல்களை தெரிந்துகொள்வோம்…!!!*

*கொடிமரம்* என்பது *இறைவனை* குறிக்கும்.

*கொடிக்கயிறு* *சக்தியைக்* குறிக்கும்.

உயரே செல்லும் கொடிச்சீலை உயிர்களைக் *(மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள்)* குறிக்கும்.

நந்தி *தர்மத்தை* குறிக்கும்.

கர்பகிரகத்தில் இருக்கும் *இறைவன்* எப்போதும் *தர்மத்தையே* பாக்கிறான் என்பதே அர்த்தம்.

பெரிய நான்கு கோபுரவாசல் ஆலயங்கள் நான்கு வழிகளை காட்டுகின்றன.

அவை

*பக்திவழி,*

*ஞானவழி,*

*ராஜவழி,*

*கர்மவழிகளை* குறிக்கும்.

எந்த வழிகளாலும் *நீ இறைவனை காணலாம்* என்பதே அதன் அர்த்தம்.

இங்கே நான்கு வாசல் வைக்கப்பட்ட ஆலயமானாலும் கர்பகிரத்துக்கு ஒருவாசல் தான் வைத்தார்கள் ஏன் என்றால் *தாயின் கருவறையும் ஆலய கர்பகிரகமும்* ஒன்றுதான்.

அதனாலேயே *கர்பகிரகத்தை இருளாகவும்* அதன் விதானத்தையும் அரைகோளவடிவமாக வைத்தார்கள்.

வெளியில் உள்ள ஒளிகதிர்களை கோபுரம் வாங்கி கர்பகிரத்து அனுப்புகிறது.

கர்பகிரகம் இருளாக இருப்பதால் அந்த ஒளிக்கதிர்கள் தங்கமுடியாமல் வெளியேறிகொண்டு இருக்கும்.

*கருவறையில் ஒளிக்கும்…*

வேத மங்கள மந்திர அலைகள் இதனாலே வெளியே பரவுவதால் அவை உடலில் படவேணும் என்பதற்காகவே திருக்கோவில் ஆண்கள் சட்டை அணிவது இல்லை…

கர்பகிரகத்துள் இறைவன் ஏன் வந்தான் என பார்போம். *ஆண் பெண் கலவையிலேயே கர்பம் தரிக்க முடியும்.*

அந்த கலவையின் நிறமாகதான்

*ஆணின் வெள்ளையணுவை* (வெள்ளை) நிறமாகவும்

*பெண்ணின் கருப்பை நிறத்தை காவி* (சிவப்பு) நிறமாகவும்

*ஆலய வெளிச்சுவரில் வெள்ளையும் காவியுமாக வர்ணம் தீட்டிணார்கள்…*

இந்த *கலவையில்தான் இறைவனின் ஆன்மா* தாயின் கர்பகிரகத்துள் பிண்டவடிவில் தோண்றுகிறான்.

இந்த பிண்ட வடிவம்தான் லிங்கத்தின் உறுளை வடிவமாக வைத்தனர். *மிருகங்கள் கூட பிண்டவடிவிலேயே தோண்றுகின்றன.*

அதனால் இவை எல்லா உயிகளின் தோற்றம் இறைவன் இயக்கம் என்பதை உணர்த்துவதே.

இறைவனை வேதமந்திர மூலமாக..

ஆகாயத்தில் இருந்து காற்றுக்கு அணுப்பி காற்றில் மூலமாக யாகத்துக்குள் அணுப்பி வைத்து யாக அக்னியில் இருந்து நிறைகும்பத்துக்கு மாற்றி அந்த நீரை விக்ரகத்துள் அனுப்பி பஞ்சபூதத்தை அந்த *விக்ரகத்துள் அடக்கியே நாம் இறைவனை வழிபடுகிறோம்.*

அதனாலேயே *பிராணபிதிஷ்டை என அழைக்கிறோம்…!!!*

என்ன ஒரு தெய்வீக அறிவியல் கலந்த ஆன்மிக தகவல் வியப்பூட்டுகிறது அல்லவா…

*இந்து தர்மத்தை நினைத்து நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்…!!!*

இனி கோயில்களில் சுவர்களில்❗❕ *சிவப்பு வெள்ளை நிறங்களை பற்றி நாமே இனி தெரிந்து கொள்வோம்….*

*கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?*

அறிவியல் பூர்வமான விளக்கம்…

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், *கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது.* அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள *ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.*

இது *நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும்.* அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும்.

எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்….

அது *உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்…!!!*

*நமது முன்னோர்கள் இந்து தர்மத்தையும், அதன் கலாச்சாரத்தையும், மிகவும் சிறப்பாக வழிநடத்தி உள்ளார்கள்…*

*இன்றைய இளைய தலைமுறைகள் அவற்றை பின்பற்றி காப்பதே இளைய தலைமுறைகள் கடைமையாகும்…!!!*

Comments

Popular posts from this blog

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...

Fun Stills: Helmet is Necessary for Thief Also

This is wild! 🤯 My man's scooter was stolen, he filed an FIR, and then he gets a traffic challan with the thief's face in the picture! 🛵 Talk about irony! 😂 This just proves how necessary helmets are, especially if you're up to no good! #ScootyTales

அபிமன்யுவின் மரணத்திற்குப் பின்பு நிகழ்ந்தவை....

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்... அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுக பற்றி கொண்டு... கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ? என்று கேட்டான். அதற்கு கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன்: கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு பற்று, பாசம், பந்தம் , எதுவும் கிடையாது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. கண்ணன்: உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அர்ஜுனன்: அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச, பந்தம் அவர்களை விட்டு போகாது . கண்ணன்: அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன். ஒளிப்பிழம்பு வடிவுடன் சொகலோகத்தில் இருந்தான் அப...