Skip to main content

திருவோடு

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.

ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.

பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் “பிச்சை” ஓட்டை எவ்வளவு

காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..

எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம்.

யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, ‘இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.

அந்த துறவி “அடப்பாவிகளா! மூணு தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து

அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்…. பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க…

துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.

துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து…

மெள்ள மெள்ள…

மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்…!

பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.

ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.

பிச்சைக்காரனின் கையில் அந்தத்

தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!

“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.

இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு *ஓட்டில்* (Vote) பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.

*ஓட்டின்* மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.

படித்ததில் பிடித்தது.

Comments

Popular posts from this blog

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...

Fun Stills: Helmet is Necessary for Thief Also

This is wild! 🤯 My man's scooter was stolen, he filed an FIR, and then he gets a traffic challan with the thief's face in the picture! 🛵 Talk about irony! 😂 This just proves how necessary helmets are, especially if you're up to no good! #ScootyTales

அபிமன்யுவின் மரணத்திற்குப் பின்பு நிகழ்ந்தவை....

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்... அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுக பற்றி கொண்டு... கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ? என்று கேட்டான். அதற்கு கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன்: கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு பற்று, பாசம், பந்தம் , எதுவும் கிடையாது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. கண்ணன்: உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அர்ஜுனன்: அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச, பந்தம் அவர்களை விட்டு போகாது . கண்ணன்: அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன். ஒளிப்பிழம்பு வடிவுடன் சொகலோகத்தில் இருந்தான் அப...