Skip to main content

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,

ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் #மகாத்மா…

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் #ஜவஹர்லால் நேரு…

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் #பெட்ரண்ட்_ரஸல்…

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் #ஆல்பர்ட்_ஐன்ஸ்டீன்…

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் #நெல்சன்_மண்டேலா…

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்…

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் #சார்லிசாப்லின்..

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் #வின்ஸ்டன்_சர்ச்சில்…

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் #மார்டின்_லூதர்கிங்…

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் #பகத்சிங்…

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து

என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.

ஆபிரகாம்_லிங்கன்…

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி

#ஜூலியஸ்_சீசர்…

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..

#டெஸ்கார்டஸ்…

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…

#இங்கர்சால்…

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே

விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!

#பிரான்சிஸ்_பேக்கன்…

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட

பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!

#லெனின்…

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!

#ஆஸ்கார் வைல்ட்…

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

#சிக்மண்ட்_ப்ராய்ட்…

.இந்த புத்தாண்டு முதல் தொடங்குவோம்.

Comments

Popular posts from this blog

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...

Fun Stills: Helmet is Necessary for Thief Also

This is wild! 🤯 My man's scooter was stolen, he filed an FIR, and then he gets a traffic challan with the thief's face in the picture! 🛵 Talk about irony! 😂 This just proves how necessary helmets are, especially if you're up to no good! #ScootyTales

அபிமன்யுவின் மரணத்திற்குப் பின்பு நிகழ்ந்தவை....

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்... அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுக பற்றி கொண்டு... கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ? என்று கேட்டான். அதற்கு கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன்: கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு பற்று, பாசம், பந்தம் , எதுவும் கிடையாது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. கண்ணன்: உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அர்ஜுனன்: அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச, பந்தம் அவர்களை விட்டு போகாது . கண்ணன்: அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன். ஒளிப்பிழம்பு வடிவுடன் சொகலோகத்தில் இருந்தான் அப...