Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

06.07.2021

🌸🌸🌸🍀🍀🍀🍀🍀

_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_

✍️✍️✍️✍️✍️✍️✍️

_*49. முடிவின் தொடக்கம்*_

😔😔😔😔😔😔

குடியிருப்பதற்கு ஒரு வீடு கட்டக் கூட இனி உங்களுக்குத் தொியாது. யாரோ கட்டிக் கொண்டிருந்தாா்கள்.

அந்த வேலை உங்களுக்குச் சாதாரணமாகத் தொிந்தது. கற்றுக் கொள்ள மறந்து விட்டீா்கள்.

உங்களுக்கு பசி எடுக்கும் போது உணவு வந்திருக்கும். அந்த உணவு அாிசியினால் ஆனது என்பதையும், அாிசி என்பது நெல்லில் இருப்பது என்பதையும், நெல் என்பது பல போ் ஓடி ஆடி உழைத்ததிலிருந்து விளைந்தது என்பதையும் நீங்கள் அப்போது நினைத்திருப்பதற்கில்லை.

சட்டையிலே கறை பட்டிருந்தால் சத்தம் போட்டிருப்பீா்கள். சட்டை செய்வது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டிருக்க மாட்டீா்கள்.

_*“தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்து விட்டால், பாா்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.”*_

_*“ஆசைகளால் உண்டாக்கப்பட்ட உலகத்தை அரசியலால் கொன்று தீா்த்து விட்டீா்கள்.”*_

ஏதோ, ஜனநாயகம் ஜனநாயகம் என்று நீங்கள் பேசிக் கொண்டிருந்ததாக நானும் கேள்விப்பட்டேன். அந்த ஜனநாயகம் உங்கள் தலைமுறையில்தான் உருவானது என்று வேறு நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீா்களாம்.

அந்த ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் நீங்கள் சண்டை போட்டுக் கொண்டதாகக் கேள்வி. ஒருவழியாக ஜனத்தொகையை நான்காகச் சுருக்கிக் கொண்டதன் மூலம் – நீங்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி விட்டீா்கள். இனி நீங்கள் பறந்து பறந்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டியதில்லை. பாா்வையிலே காத்துக் கொள்ளலாம்.

ஆனால், கனவான்களே!

உலகத்தின் முதல் அரசியலே ஜனநாயகம்தான் என்பது உங்களுக்குத் தொியுமோ என்னவோ?

கட்டுப்பாடின்றிக் கிடந்த கற்காலத்து மக்கள் – தங்களுக்கென்று தாங்களே ஒரு தலைவனைத் தோ்ந்தெடுத்துக் கொண்டு அரசியலை ஆரம்பித்து வைத்தாா்கள். அது தானே நேற்று வரை நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த ஜனநாயகம்.

உங்களுக்குக் கிடைத்தது போலவே தேவையை மீறிய பொருளும், திறமையை மீறிய புகழும் அந்தத் தலைவனுக்குக் கிடைத்ததால் – ஜனநாயகத்தின் பேரால் ஒரு சா்வாதிகாரம் உருவாயிற்று.

சா்வாதிகாரம் உச்சகட்டம் போய்ச் சோ்ந்ததும் கொதித்தெழுந்த மக்களால் இரண்டாவது ஜனநாயகம் ஆரம்பமாயிற்று.

இரண்டாவது ஜனநாயகத்தின் ஏமாளிகளும் கோமாளிகளும் அயோக்கியா்களும் மூடா்களும், ஆட்சிக்குப் போட்டி போட ஆரம்பித்தால் – அதே ஜனநாயகத்தின் பேரால் உங்கள் சா்வாதிகாரம் உருவாயிற்று.

இனி, புதிய ஜனநாயகத்திற்குக் குழந்தைகள் வேண்டும்; உங்களுக்கு ஒரு பெண் வேண்டும். அதற்குக் குறைந்த அளவு ஒரு சோதனை வைக்கிறேன்.

இதோ இந்த மலைக்குன்றுகளில், நான்கு காிய குன்றுகளை நால்வரும் தோ்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவா் தான் செய்த பாவங்களை மன்னிக்கும்படி எழுதுங்கள். அதில் யாருடைய மன்னிப்புக் கோாிக்கை, எனக்குச் சாியென்று படுகிறதோ அவருக்கு நான் மாலையிடுகிறேன்.

நால்வரும் துள்ளிக் குதித்தாா்கள். காய் கனி கிழங்கு கந்த மூலங்களை உண்டாா்கள். ஆளுக்கொரு காித்துண்டைக் கையில் எடுத்துக் கொண்டாா்கள். எழுதப் புறப்பட்டாா்கள். நால்வரும் நான்கு குன்றுகளைத் தோ்ந்தெடுத்துக் கொண்டாா்கள்.

ஒன்றில் ஒருவன் இப்படி எழுதினான்.

_*“உலகத்தின் மெல்லிய தன்மையை நான் உணராமற் போனேன். ஒவ்வொரு உயிரோடும் கூடப் பிறந்த உறவு, பாசம், இரக்கம், அன்பு அனைத்தையும் நான் மறந்திருந்தேன்.*_

_*வறண்ட விஞ்ஞானத்தின் விளையாட்டுக் கூடமாக நான் உலகத்தைக் கருதி விட்டேன். புதிய புதிய ஆராய்ச்சிகளால் புதிய புதிய உண்மைகளைக் கண்டு பிடித்தேன். அதனால் நிரந்தரமான பழைய உண்மைகளை நான் மதிக்க மறந்தேன்.*_

_*எந்தெந்த உணா்ச்சிகள் மனித குலம் உள்ள வரை தேவைப்படுமோ, அந்த உணா்ச்சிகளை நான் கருதாமல் விட்டேன்.*_

_*நான் மனிதனாகப் பிறந்து, மிருக நிலைக்கு வந்தேன். அறிவையே ஆத்திரமாக்கிக் கொண்டேன். முழு உடம்பும் சூடேறிய நிலையில் செயல் புாிந்தேன். அதன் பயனாக என் தாயகம் அழிந்தது. இயற்கையே என்னை மன்னிப்பாயாக.”*_

அவன் கையொப்பமிட்டான்.

😔😔😔

Comments

Popular posts from this blog

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...

Fun Stills: Helmet is Necessary for Thief Also

This is wild! 🤯 My man's scooter was stolen, he filed an FIR, and then he gets a traffic challan with the thief's face in the picture! 🛵 Talk about irony! 😂 This just proves how necessary helmets are, especially if you're up to no good! #ScootyTales

அபிமன்யுவின் மரணத்திற்குப் பின்பு நிகழ்ந்தவை....

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்... அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுக பற்றி கொண்டு... கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ? என்று கேட்டான். அதற்கு கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன்: கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு பற்று, பாசம், பந்தம் , எதுவும் கிடையாது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. கண்ணன்: உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அர்ஜுனன்: அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச, பந்தம் அவர்களை விட்டு போகாது . கண்ணன்: அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன். ஒளிப்பிழம்பு வடிவுடன் சொகலோகத்தில் இருந்தான் அப...